வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை பிரதேசத்தில் புஸ்ரீட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து 2 அரை பவுண் தங்க நகை மற்றும் 3 இலச்சம் ரூபா பணம் திருட்டுப்போன சம்பவம் நேற்று திங்கட்கிழமை (27) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளர் குடும்ப சகிதமாக சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு இரவு 7 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த 2 அரை பவுண் தங்க ஆபரணம் மற்றும் 3 இலச்சம் ரூபா பணத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ளதைய:த்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.