
இறக்குமதி செய்யப்படும் டயரின் விலையை ஐந்து சதவீதத்தால் குறைக்க முடியும் என டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டயர் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட டயர் தொகை களஞ்சியத்தில் உள்ளமையினால் ஐந்து வீதம் மாத்திரமே விலைக்குறைப்பு செய்ய முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளது.
எனினும் தற்போது டொலருக்க நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளமையினால் தற்காலிகமாக ஐந்து சதவீதத்தினால் விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் மூன்று மாதங்களில் 15 சதவீதமாக விலையினை குறைக்க முடியும் எனவும் டயர் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொன்சேகா தெரிவித்துள்ளார்.