
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – மாரீசன் கூடல் பகுதியில் 150 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.