
நாவலர் பெருமானின் வரலாற்று கண்காட்சியும், விற்பனையும் யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் மண்டபத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வை, அதிக அளவிலான பாடசாலை மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
கண்காட்சியில் நாவலர் பெருமானின் படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இலக்கிய நாவல்களும் அறிஞர்கள் எழுதிய அறிவு சார்ந்த படைப்புக்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த கண்காட்சி நாளை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.