கிளிநொச்சியில் தடுப்பூசி ஏற்றும் பணி நேற்று ஆரம்பம்….!

மாவட்டத்தில் தொவிட் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் நிலையில் 65 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது என பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
நேற்று  காலை முதல் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாகியதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
அதற்கு அமைவாக இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள கீழ்வரும் தடுப்பூசி நிலையங்களில் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அருகில் உள்ள நிலையத்துக்கு சென்று மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், புனித திரேசா பெண்கள் கல்லூரி, உருத்திரபுரம் ஆரம்ப வைத்தியசாலை, வட்டக்கச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகாவித்தியாலயம், பாரதிபுரம் மகாவித்தியாலயம்,
புன்னை நீராவி அ.த.க. பாடசாலை, பிரமந்தனாறு கிராம சேவையாளர் அலுவலகம், தர்மபுரம் மத்திய கல்லூரி, கல்மடுநகர் அ.த.க. பாடசாலை, முருகானந்தா அ.த.க. பாடசாலை, பரந்தன் கிராம சேவையாளர் அலுவலகம்
முழங்காவில் வைத்தியசாலை, பூநகரி வைத்தியசாலை, வேவில் வைத்தியசாலை, பளை மத்திய கல்லூரி ஆகிய தடுப்பூசி நிலையங்களில் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்த செல்வோர் தடுப்பூசி அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
தற்பொழுது படிப்படியாக பரவல் கட்டுப்பாட்டுக்குள் வருவதாகவும், மக்கள் இதுவரை ஒத்துழைப்பு வழங்கியது போன்று தொடர்ந்தும் வழங்கினால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
இரண்டாவது ஊசி பெற்றுக்கொள்ளும் அதேவேளை, முதல் ஊசி பெறாதவர்களும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டதுடன், நடமாடும் தடுப்பூசி ஏற்றும் பணிகளும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews