அனைத்து எரிபொருட்களின் விலைகளும் குறைப்பு

இன்று நள்ளிரவு (30) முதல் அமுலுக்கு வரும் வகையில், அனைத்து எரிபொருட்களின் விலைகளும் குறைக்கப்படுவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இன்று (29) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த விலைக் குறைப்புக்கு அமைய,

– பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 400 இலிருந்து ரூ. 60 இனால் குறைப்பு – புதிய விலை ரூ.340
– பெற்றோல் ஒக்டேன் 95: ரூ. 510 இலிருந்து ரூ.135 இனால் குறைப்பு – புதிய விலை ரூ.375
– ஒட்டோ டீசல்: ரூ. 405 இலிருந்து ரூ.80 இனால் குறைப்பு – புதிய விலை ரூ.325
– சுப்பர் டீசல்: ரூ. 510 இலிருந்து ரூ.45 இனால் குறைப்பு – புதிய விலை ரூ.465
– மண்ணெண்ணெய்: ரூ. 305 இலிருந்து ரூ.10 இனால் குறைப்பு – புதிய விலை ரூ.295

அந்த வகையில்,

பெற்றோல் ஒக்டேன் 92: ரூ.340
பெற்றோல் ஒக்டேன் 95: ரூ. 375
ஒட்டோ டீசல்: ரூ.325
சுப்பர் டீசல் (4 ஸ்டார் யூரோ 4) – ரூ.465
மண்ணெண்ணெய் : ரூ.295
குறித்த விலைக்கு நிகராக, LIOC எரிபொருட்களும் விலைகளும் குறைக்கப்பட்டு பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews