
கடலட்டை பண்ணைக்காக பாரம்பரிய தொழில்களை அகற்றி ஏழை மக்களை வதைக்கும் செயற்பாட்டில்
கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பில் நீதி கேட்ட அப்பாவி மீனவர்களை இன்றைய தினம் பொலிசாரை கொண்டு மிரட்டி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த அநீதி தொடர்பில் நீதி கேட்டவர்களை ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக 150 நாளாக போராடியவர்கள் என்றும் அவர்களுக்கு எதிராகவே கடற்றொழில் நீரியல் துறை உதவி பணிப்பாளர் மோகனகுமார் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






