
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.
அந்தவகையில் இன்றையதினம் காக்கைதீவு பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார்.
இதன்போது சாவற்காடு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கான இறங்கு துறை அமைத்தல் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய கோரிக்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.


