நாட்டின் மாணவர்கள் 2048ஆம் ஆண்டளவில் நாட்டைக் கைப்பற்றும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், தொழில் நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களுடன் புதுப்பித்து எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் நான்கு வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர், அதே பழைய முறையைப் பின்பற்றுவதா அல்லது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் புதிய முறையின் மூலம் முன்னேறுவதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் 135வது வருடாந்த பரிசளிப்பு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு செல்ல வேண்டும் எனவும், மற்ற நாடுகளை விட முன்னேறும் நாடாக மாற்ற வேண்டும்.
அத்தகைய நாட்டைக் கட்டியெழுப்ப புதிய தலைவர்கள் தேவை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு ஆனந்தா கல்லூரியின் 135வது வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
2020-2021 ஆண்டுகளில் திறமை செலுத்திய மாணவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி முதலில் மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ஜனாதிபதிக்கு கல்லூரி சாரணர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள போர் வீரர்களின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தேசிய, மத, கலாசார, அரசியல், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி இன அமைதிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சுபசன் ஆனந்திய நபர் ஒருவருக்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் ‘ஆனந்தபிமானி’ விருது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டதோடு, தனது பாடசாலை வாழ்க்கையின்போது சகல துறைகளிலும் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த ஆனந்த மாணவருக்கான ‘பிரிட்ஸ்கூன்ஸ்’ விருது டபிள்யூ.எஸ்.நிம்சத்திற்கு ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.