முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் 4 லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் பிரமந்தனாறு மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் 150 பாடசாலை மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பிரமந்தனாறு மகாவித்தியாலயம், கல்லாறு அ.த.க பாடசாலை, மயில்வாகனபுரம் அ.த.க பாடசாலை, தப்பிராசாபுரம் அ.த.க பாடசாலை, அம்பிகை வித்தியாலம் ஆகிய பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறிய மாணவர்களிற்கு குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது,
சிங்கள கொடையாளர்கள் நால்வர் இணைந்து குறித்த பாட புத்தகத்தினை இராணுவ தலைமையகத் தின் ஏற்பாட்டுடன் இன்று வழங்கி வைத்தனர்.
குறித்த நிகழ்வில், முல்லைத்தீவு இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜன் ஜெனரல் யூடி விஜயசேகர, 57 வது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் JPC பீரிஸ்
கண்டாவளை உதவி பிரதேச செயலாளர் S துவாரகா, பிரமந்தனாறு மகாவித்தியாலய முதல்வர் க. தெய்வராஜா முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.