மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவரது தாயார் இராசம்மா அயலவர் கிருபாமூர்த்தி தம்பி பிரணவன் ஆகியோர் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட செம்மணிப் படுகொலையின் இருபத்து ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய கட்சி அலுவலகத்தில் அதன் செயலாளர் நாயகம் எம் கே சிவாஜிலிங்கம் அவர்களால் நினைவேந்தப்பட்டது.
பிற்பகல் 3:00 மணியளவில் இடம் பெற்ற நினைவேந்தலில் மலர் அஞ்சலி, மற்றும் ஈகைசுடர்கள் ஏற்றப்பட்டன.
சம்பவம் கடந்த 1996/09/07 அன்று கிருசாந்தி குமாராசாமி கல்விப் பொதுதாராதர உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது 11 இராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவரது தாயார் இராசம்மா அவரது அயலவர் கிருபாமூர்த்தி, சகோதரன் பிரணவன் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர்.
அவர்களது 25 வது நினைவேந்தலே இன்று இடம் பெற்றது