இலங்கையில் முதல் முதல் உருவாக்கப்பட்ட ஜக்கிய தேசிய கட்சி ஒரு அடையாளம் இல்லாமல் அழிந்து போயுள்ளது — பா.உறுப்பினர் இரா.சாணக்கியன்!

இலங்கையில் முதல்முதல் உருவாக்கப்பட்டபிரதான கட்சியான  ஜக்கிய தேசிய கட்சி ஒரு அடையாளம் இல்லாமல் அழிந்து போயுள்ளது அதுபோலவே ஸ்ரீ லங்க சுதந்திர கட்சியும் அடையாளம் இல்லாமல் போயுள்ளது ஆனால் தந்தை செல்லாவா ஒரு தீர்க்கதரிசி  உருவாக்கிய தமிழர கட்சி இன்றுவரை வடகிழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துவரும் ஒரு கட்சி என பா.உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தமிழரசு கட்சி வாலிபர் முன்னணி தலைவர்  திவாகர் தலைமையில் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125 வது ஜனனதினம் இன்று வெள்ளிக்கிழமை (31) வாவிக்கரையில் உள்ள தந்தை செல்வா பூங்காவில் இடம்பெற்ற தினைவேந்தலில் பா.உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியேந்திரன், ஞா.சிறிநேசன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அங்கு அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

இதன் போது அங்கு ஊடகங்களுக்கு இரா.சாணகக்கியன் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரையும் தொடர்ந்து வடகிழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துவருகின்றது அதற்கான காரணம் கட்சி உருவாக்கப்பட்டபோது அதில் உருவாக்கப்பட்ட கட்சி யாப்பு கட்சி எவ்வாறு இருக்கவேண்டும் என்று. அந்த செயற்பாடு காரணமாக வடக்கு கிழக்கில் மக்கள் தொடந்து ஆதரவு வழங்க எடுக்கப்பட்ட செயற்பாடு தான் காரணம்.

எனவே எமது அரசியல் தீர்வை கொண்டுவரும் வரைக்கும் கட்சியின் கொள்கையை மக்களுக்கு எடுத்துரைத்து மக்களை கட்சியின் பாதையில் கொண்டு வரவேண்டும். அதேவேளை கட்சியின் மாகாநாடு நடாத்தப்படவேண்டிய காலப்பகுதி எப்போதே முடிந்துவவிட்டது இருந்தும் பல காரணங்களினால் நடாத்தப்படாமல் உள்ளது.

எனவே கட்சியின் மாநாடு நடாத்தப்படவேண்டும்; இதன் மூலம் இன்னும் எதிர்கால திட்டங்களை தீட்டீ சிறப்பாக செய்யமுடியும்.

மத்திய குழு கூட்டத்தில் வட்டார மற்றும் கிளைகள் ஏப்பிரல் மாதத்துக்குள் புனரமைத்து மாநாட்டுக்கு தயார்படவேண்டும் என தீர்மானம் தெரிவிக்கப்பட்டதுடன் இந்த தந்தை செல்வாவின் 125 நினைவு தினத்தில் அவரின் கொள்கைகளை தீவிரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் என்றார்

Recommended For You

About the Author: Editor Elukainews