
தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளிற்கு தீர்வு காணும் மக்கள் சந்திப்பு இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் பள்ளிக்குடா பகுதியில் கடலட்டை பண்ணை மேற்கொண்டுவரும் மீனவர்களில் 11 பேருக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் ஊடகங்களிற்கு பதிலளித்தார்.