
சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் 303. வது இதழ் நேற்று 31/03/2023 சந்நிதியான் ஆச்சிரமத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது.
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையினரால் மாதாந்தம் வெளியிடப்படும் பங்குனி மாதத்திற்க்கான ஞானச்சுடர் இதழாக 303 ஆவது மலராக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதில் நி மதிப்பீட்டுரையினை ஆசிரியர் நி.பாபுதரன் நிகழ்த்தினார். வெளியீட்டுரையினை இளைப்பாறிய அதிபர் திவ.கணேசமூர்த்தி நிகழத்தினார்.
இதில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள் அடியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்
மேலும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளும் வழங்கப்பட்டன.












