
ஹாட்லிக் கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரிகளின் முன்னாள் கணித பேராசான் இரத்தினசபாபதி நினைவாக உடைபந்தாட்ட போட்டி ஹாட்லிக் கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவ அணிகளுக்கிடையில் நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் வைத்திய கலாநிதி வேமகமலநாதன் தலமையில் 01.04.2023 பிற்பகல் 2:30 மணியளவில் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.






14 வயதிற்க்கு உட்பட்ட மாணவர்களுக்காக இடம் பெற்ற போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி ஹாட்லிக் கல்லூரிக்கு 06 கோல்களை போட்டு வெற்றியை தமதாக்கியது
தொடர்ந்து 20 வயதிற்க்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் ஹாட்லிக் கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரிகள் மோதிக் கொண்டன.
இதில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. தொடர்ந்து தண்ட உதை மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் நெல்லியடி மத்திய கல்லூரி ஹாட்லிக் கல்லூரிக்கு மூன்று கோல்களை போட்டது. ஹாட்லிக் கல்லூரி ஒரு கோலை நெல்லியடி மத்திய கல்லூரிக்கு போட்டது. இதிலும் நெல்லியடி மத்திய கல்லூரி வெற்றியை தமதாக்கியது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராசா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக ஹாட்லிக் கல்லூரி அதிபர் T. கலைச்செல்வன், நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் G.கிருஸ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கௌரவ விருந்தினர்களாக வடமராட்சி வலயகல்வி பணிப்பாளர் சத்தியபாலன், நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் மருத்துவ கலாநிதி வே.கமலநாதன், ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர், நெல்லியடி மத்திய கல்லூரியின் முன்னாளர் அதிபர்கள்,
ஹாட்லிக் கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களை பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் வழங்கி வைத்தனர்.
இதே வேளை காலை 9:00 மணியளவில் இடம் பெற்ற ஹாட்லிக் கல்லூரி, மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி பழையமாணவர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கிடையில் இடம் பெற்ற போட்டிகளில் ஆசிரியர்களுக்கான போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியும், பழைய மாணவர்களுக்கான போட்டியில் ஹாட்லிக் கல்லூரியும் வெற்றியீட்டியது. கணித பேராசான் இரத்தினசபாபதி நினைவு கேடையத்தை நெல்லியடி மத்திய கல்லூரி தமதாக்கி கொண்டது.
இரத்தினசபாபதி அவர்கள் ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் ஹாட்லிக் கல்லூரிகளில் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு பொறியியல் பிரிவில் தெரிவாகியிருந்த சூழலில்தான் அரசால் தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டமை குறிப்பிட தக்கது.