மட்டக்களப்பில் பிச்சைக்கார வேடம் பூண்டு சைக்கிள் திருடிய கொழும்பைச் சேர்ந்த பொலிஸ் ஜஆர்சி பட்டியைல் சேர்ந்த ஒருவர் கைது

மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்சக்கரவண்யை திருடிச் சென்ற கொழும்பில் பல குற்றங்கள் புரிந்து குற்றவாளியான பொலிசின் ஜஆர்சி பட்டியலிலுள்ள தெமட்டகொடையைச் சேர்ந்த ஒருவரை மட்டு பொதுச் சந்தை பகுதியில் வைத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த மாச் மாதம் 22 ம் திகதி பாடசாலை மாணவன் ஒருவன் நகர் பகுதி மத்திய வீதியிலுள்ள உணவு கடை ஒன்றின் முன்னால் துவிச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று திரும்பிய போது 30 ஆயிரம் ரூபா பெறுமதியான துவிச்;சக்கரவண்டி திருட்டுபோயுள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டடையடுத்து பொலிசார் அந்த பகுதிவீதியில்ள் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமரா மூலம் திருடனை தேடிவந்த நிலையில் பொதுச்சந்தை கட்டிட பகுதியில் பிச்சைக்கார வேடம் பூண்டு பிச்சை எடுத்துவந்த தெமட்ட கொடை பிரதேசத்தைச் சோந்த 43 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் கொழும்பில் 7 குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டு பொலிஸ் ஜஆர்சி பட்டியலில் சேர்க்கப்பட்வர் எனவும் இவரை மட்டக்களப்பு றீதவான் நீதிமன்றில் நேற்று சனிக்கிழமை(01) ஆயர்படுத்திபோது இவரை எதிர்வரும் 4 ம திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews