
வாடி வீடு ஒன்றில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் சிறு காயங்களுக்கு உள்ளாகிய குறித்த நபர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் ஊவா குடா ஓயா வெஹெரயாய பிரதேசத்தில் இடம்பெற்றது.
வெஹெரயாய பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான மரண விசாரணைகள், வெஹெரயாய மரண விசாரணை அதிகாரி.ஏ.எம்.சந்திமால் தேசப்பிரிய தலைமையில் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.