இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்ச்சியாக முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற்றுக்கொள்வதற்காக சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டம் தற்காலிக சட்டமாகவே நாடாளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்டது.
எனினும் இது தற்காலிக சட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் தற்போதுள்ள சட்டத்திட்டங்களுக்கு அமைவாக இதனை நிரந்தரமாகிக் கொண்டனர்.
இதற்கூடாக எமக்குப் புலனாவது என்னவெனில், பயங்கரவாதத் தடைச்சட்டமானது ஆட்சியிலுள்ளவர்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் இந்தச் சட்டத்தை இரத்துச் செய்யாது தொடர்ச்சியாக அமுல்படுத்துவதற்கே முயல்கின்றனர்.
வடக்கில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமை காரணமாகவே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் தற்போதைய நிலையில் இலங்கையில் அவ்வாறான எந்த முரண்பாடும் இல்லை.
எனவே அவ்வாறான எந்த முரண்பாடுகளும் நாட்டில் இல்லாத சூழலிலேயே பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்தச் சட்டம் மிகவும் மோசமான சட்டம் என்று சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து மக்களும் மனித உரிமைகளுக்காக செயற்படும் அமைப்புகளும் குரல்கொடுத்து வருகின்றனர்