
சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு வடமராட்சி வடக்கு மீனவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சற்று முன்னர் ஆரம்பமாகிய குறித்த போராட்டத்தில் சுமார் 300 பேர்வரை தற்போது கலந்து கொண்டுள்ளனர்.
பிரதேச செயலக ஊழியர்கள் எவரும் கடமைக்கு உள்ளே செல்லமுடியாத வாறு பிரதேச செயலக வாயில்கள் மறிக்கப்பட்டு மீனவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

பிரதேச செயலர் மற்றும் பருத்தித்துறை பொலீசார் மீனவர்களை சமரசம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈழக்கடல் மமீனவர்கழை வாழ விடு அல்லது சாகவிடு, தண்ணீரில் தத்தளிக்கும்
மீனவர்களை ஈழ நாட்டில் கண்ணீரில் தத்தளிக்கும் தமிழர் வீட்டில்
மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சுருக்கு வலையை உடனடியாக நிறுத்து
தடை செய்யப்பட்ட அனைத்து தொழிலையும் உடனடியாக நிறுத்து
என கோசங்கள் எழுப்பப்படுகின்றன.



