
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்குவதில் உள்ள சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் கோழி இறைச்சியின் விலை கிலோ ஒன்றுக்கு 1,200 ரூபாவில் இருந்து 1,400 ரூபாவாக அதிகரிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.