
“விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வார்” என்ற தொனிப்பொருளிலான போதைப்பொருள் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி இன்றைய தினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் திருமதி வதனி தில்லைச்செல்வன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலாநிதி, செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், இந்த ஓவியக் கண்காட்சியினை, ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் பார்வையிட்டனர்.
இந்த ஓவியங்கள் வட்டுக்கோட்டை இந்து கல்லூரி மாணவர்களால் வரையப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வினை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சமூக நெறிக் கழகம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










