
11 வயதுடைய கெனோரீடா டில்மினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி தனது 09 மற்றும் 07 வயதுடைய சகோதரர்களுடன் படுக்கை அறையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சிறுமியின் தந்தை தோட்டத்திலும், தாய் சமையல் அறையிலும் இருந்துள்ளனர்.
சமையல் முடித்த சிறுவர்கள் விளையாடிய அறைக்கு தாயார் வந்தபோது அறையின் கதவு உள்ளோ பூட்டப்பட்டிருந்ததால் யன்னல் வழியே தாய் உள்ளே பார்த்தார்.
இதன்போது தனது முத்த மகள் ஊஞ்சலில் இறுகிய நிலையில் இருந்ததை அவதானித்து அயலவர்களின் உதவியுடன் சிறுமியை மீட்டு தெரணியகலை மருத்துவமனையில் ஆனுமதித்தபோது சிறுமி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரணியகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.