
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியது கடனல்ல, பொறி என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் இலங்கை விரைவில் வீதியில் விழும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வங்கிகளில் கடன் பெற்று வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதாக இருந்தாலும் அரசாங்க சொத்துக்களை விற்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செய்தால் இலங்கையை முடக்கி விடுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.