
இன்றைய தினம் இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய எல்லைக்குள் உள் நுழைந்ததால் இந்திய கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்கள் பயணித்த படகுகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் குரு நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிய முடிகிறது.




