
சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நாளான இன்று விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான பணியில் ஈடுபடும் பணியாளர்களை கௌரவப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போட்டியில், ஆர்வத்தடன் பலரும் கலந்து கொண்டனர்.






