
வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிக்குளம் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான இறுதி நேர பஸ் வண்டி இன்று மாலை கடும் இடியுடன் கூடிய மழை பெய்த வேளை பயணிகள் உள்ளே நுழைய முடியாத சந்தர்ப்பத்தில், பின்பக்க நுழைவாயிலில் பொதிகள் இருக்கும் பகுதியில் அமர்ந்தும், நுழைவாயிலில் தொங்கியவாறும் பயணம் செய்தனர்.
இதில் ஒரு விபத்து ஏற்படும் சந்தர்ப்பத்தில் உயிர் சேதம் ஏற்படலாம். நுழைவாயிலில் நின்று செல்வதே தடை செய்யப்பட்ட போதும் இப்படியான பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கின்றது.
இதற்கு சம்மந்தப்பட்ட அதிகரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க பயணிகள் கேட்டுக்கொள்கின்றனர்.