உடன்படிக்கையின் பிரகாரம் செயற்படத் தவறினால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடனை பெற முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரசாங்க வருமானங்களை அதிகரிக்குமாறும், அரச நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்குமாறும் சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தும் அதேவேளை, வரிச் சலுகைகள மக்களுக்கு வழங்கவும் அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் வரி செலுத்துகையில் மக்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.