
வல்வைவெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர ஆலய15ம்நாள் சோமாஸ்கந்தர் தேர்த்திருவிழா இன்று மிக சிறப்பாக வசந்த மண்டப பூசைகளுடன் இடம் பெற்றது.
காலை 8:30 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டப பூசையை தொடர்ந்து பஞ்சரதத்தினிலே சோமாஸ்கந்தர், விநாயகர், முருகன், வாலாம்பிகா, மாணிக்கவாசகர் ஆகிய தெயவங்கள் வலம் வந்தன.

பிரதம குரு மனோகரக்குருக்கள் தலமையில், கொடியேற்ற பிரதம குரு ம.பிரசன்னரூபன் உட்பட்ட சிவாச்சாரியார்கள் திருவிழா சிறப்பு பூசைகளை நடாத்தினர்.
12 தசாப்தங்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட அண்ணாமலை இடபவாகனத்தில் வாலாம்பிகை , வைத்தீஸ்வரர் எழுந்தருளல் இடபாரூட காட்சி எனபன 11ம் திருவிழா இரவு நடைபெற்றன.
உமையம்மையின் தவத்திருவிழா சிறப்பு இரவு கல்யாணத்திருவிழா, தண்டிகையில் நேர், முகம் பார்த்து வருவார், கல்யாணத்தின் பின் திருமுழுக்கு திருவிழா , நேற்று பிச்சாடணர் வீதியில் பிச்சையெடுத்தல் திருவிழா என்பன நடை பெற்று இன்று தேர்திருவிழா இடம் பெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


