கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்கள் உடனடியாக கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா கூறியுள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாகவும், கர்ப்பிணி தாயொருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்படுமாயின், சாதாரண நபரொருவர் தொற்றுக்குள்ளாவது போலன்றி அதிக சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.