ஆபத்தான நிலையில் திருவையாறு வில்சன் வீதி பாலம்! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

கிளிநொச்சி – திருவையாறு வில்சன் வீதியில் மூன்றாம் பகுதியில் உள்ள சரவனாஸ் பாலத்தின் அத்திபாரம் இடிந்துவிழும் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருவையாறு பிரதேச மக்கள் நாளாந்த நடவடிக்கைகளுக்காக குறித்த பாலத்தினையே பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இரணைமடு குளத்தின் இடது கரை பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் திருவையாறு வில்சன் வீதியையும், மூன்றாம் பகுதியையும் இணைக்கும் பாலம் இடிந்து விழும் நிலையில் தற்போது காணப்படுகின்றது.

எனவே பாலத்தில் பயணிப்போரின் ஆபத்தின் விபரீதத்தை புரிந்துகொண்டு உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோகரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Recommended For You

About the Author: Editor Elukainews