பொலன்னறுவை கிரித்தலை பிரதேசத்தில் இருந்து காத்தான்னுடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக லொறி ஒன்றில் எருமை மாடுகளை கடத்திச் சென்ற ஒருவரை காத்தான்குடி கடற்கரை வீதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (6) அதிகாலை மாவட்ட குற்ற விசாரணப் பிரிவினர் கைது செய்ததுடன் 6 எருமை மாடுகள் லொறி ஒன்றையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற விசாரணப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட குற்ற விசாரணப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டிலங்கவெலவின் ஆலோசனையில் சப்இன்பெக்ஸ்டர் ஆர்.எம்.ஆர்.சதுரங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை காத்தான்குடிகடற்கரை வீதியில் வைத்து குறித்த லொறியை மடக்கிபிடித்து சோதனையிட்டனர்.
இதன் போது லொறியில் சட்டவிரோதமாக 6 எருமை மாடுகளை கடத்திச் செல்வதை கண்டுபிடித்து லொறியின் சாரதியை கைது செய்ததுடன் 6 மாடுகளை லொறியையும் மீட்டு ஒப்படைத்துள்ளனர்
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.