திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கோவிட்-19 தொற்று பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“அச்சுவேலி வடக்கில் இன்று திருமண நிகழ்வு இடம்பெற்றது. மணமகன் மிருசுவிலைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது.
நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று விருந்தினர்களை அங்கிருந்து செல்ல பணிக்கப்பட்டது. அத்துடன், மணமகன், மணமகள் இருவருக்கும் அவர்களுடன் நெருக்கமான உறவினர்களுக்கும் கோவிட்-19 தொற்று பரிசோதனையை முன்னெடுக்க சுகாதார மருத்துவ அதிகாரியிடம் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், சுகாதார கட்டுப்பாடுகளை மீறி திருமண வைபவத்தை ஒழுங்கு செய்தவர்கள் மீது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யபட்டுள்ளது. அதனால் அவர்களை வரும் 15ஆம் திகதி நீதிமன்றில் முற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அச்சுவேலி பொலிஸார் கூறினர்.