
இன்றையதினம், மானிப்பாய் – கட்டுடை பகுதியில் இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
கனடாவைச் சேர்ந்த சின்னத்துரை செந்தில்நாதன் அவர்களது 12 இலட்சம் ரூபா நிதியியல் இருந்து, வன்னி அறக்கட்டளை ஊடாக இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த வீட்டினை அமைப்பதற்கான சரீர உதவியானது 513வது படைப்பிரிவு இராணுவத்தினரால் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் போத்தொட்ட, 51வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி வேலகெடர, 513வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ராஸிக், மதகுருமார், பயனாளிகள், இராணுவத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.






