
மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பெரியவெள்ளி ஆராதரனைகள் இன்று வெள்ளிக்கிழமை (7) இடம்பெற்றது.
கடந்த 2019 ம் ஆண்டு ஏப்பிரல் உயிர்தஞாயிறு தினத்தில் நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகiளை ஸாரான் காசிமின் தலைமையிலான ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பினர் குறிவைத்து தற்கொலை குண்டுதாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலபேர் காயமடைந்ததுடன் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 32 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் கடவுளான ஜேசுநாதர் இன்றைய தினம் சிலுவையில் அறையப்பட்ட பெரிய வெள்ளி தினத்தில் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறுகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆராதணைகள் இடம்பெற்றது இதில் பெரும்திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை எதிர்வரும் 9 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிர்த ஞாயிறு தினம் வரையில் தேவாலயங்களில் இடம்பெறும் ஆராதனைகளின் போது தொடர்ந்து பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என பொலிசார் தெரிவித்தனர்.