
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுன்னாகம் ஆலடி பகுதியில் சுன்னாக பொலிசாருடன் இணைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 29 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து 36 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு குறித்த நபர் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையிலு ஈடுபட்டு வந்ததாகவும் குறித்த விடயம் தொடர்பில் ராணுவ புலனாய்வுபிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்றைய தினம் பொலிசாரிடம் இணைந்து நடாத்திய தேடுதலின் போதே கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.