அரசியலமைப்பில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் உரிமைகளைக்கூட ஏரிஏ சட்டம் பறித்தெடுப்பதற்கான உள்நோக்கங் களைக் கொண்டிருக்கின்றது என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் எஸ்ஜீவநாயகம் தெரிவித்துள்ளார்.
புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வருடம் மார்ச் மாதம் 17ம் திகதி வெளியிடப்பட்ட சட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் பிற்பாடு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலைமைகள் காரணமாக மாற்று அரசாங்க கருத்துச் சிந்தனையுடைய கருத்துச் சுதந்திரத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் பேணும் ஒரு குழுவினரால் அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பட்ட இழப்புக்களை எதிர்காலத்தில் அவ்வாறானதொரு மாற்றுக்கருத்து நிலைப்பாட்டினை சிவில் சமூகமோ, மனித உரிமை ஆர்வலர்களோ, ஊடகவியலாளர்களோ, சிறுபாண்மை இனமோ அல்லது நல்லாட்சியை விரும்புகின்ற மக்கள் குழுவினரோ அரசுக்கெதிரான மாற்றுக்கருத்துக்களை முன்வைக்
குறிப்பாக 1979ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான தடைச்சட்டம் இன்றைய பொருளாதார நிலைமைக்கு முக்கியமான அடித்தளத்தையிட்டிருக்கின்றது. பயங்கரவாதம் என்ற போர்வையில், ஒட்டுமொத்த நாட்டு மக்களையும், ஒரு சிறுபாண்மை மக்களையும் அந்த மக்களிற்கு எதிராக அந்த ஆட்சித் துறை நிர்வாகம் கட்டுப்படுத்தி துன்பப்படுத்தியது என்பது உண்மை.
இதன் காரணமாக நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகளிற்கு முக்கிய பங்கு இருக்கின்றது. அதன் பின்னர் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இங்கு பயங்கரவாத நிலைமை இல்லை என்பதை மையப்படுத்தி, சர்வதேச ரழுீதியாகவும், மனித உரிமைகள் அமைப்பின் மூலமாகவும் எழுந்த பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான குரலானது, அந்த சட்டத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற நர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
இதன் விளைவாக 2018ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் சிரிஏ என்ற சட்டத்தை கொண்டு வருவதற்கான மும்மொழிவை முன்வைத்தார்கள். அதன் பிற்பாடு அந்த நல்லாட்சி அரசாங்கம் இல்லாது புானது.
தற்பொழுது உள்ள அரசாங்கத்தை நாங்கள் எவ்வாறு அழைப்பது என்று சொல்ல முடியவில்லை. தேசி பட்டியல் ஊடாகா நாடாளுமன்றம் வந்த பாராளுமன்ற உறுப்பினர் நாட்டின் அதி உயரிய பதவியான ஜனாதிபதி பதவியில் இருக்கின்றார். அதேபோன்று மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அரசாங்கம் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் பெரும்பாண்மையாக இருக்கின்றது,
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சிரிஏ சட்டத்தை கொண்டுவந்த அரசாங்க உறுப்பினர்களும் தற்போதைய ரணில் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் புதிதாக ஏரிஏ என்ற புதிய சட்டத்தை இந்த அரசாங்கம் கொண்டு வருவதற்காக முஸ்திக்கின்றது. இது ஒட்டுமொத்த நாட்டினுடைய ஜனநாயகத்திற்கு விழுந்த ஒரு பாரிய அடியாகவே பார்க்கின்றோம்.
கருத்துச்சுதந்திரம், ஊடகச்சுதந்திரம், மனித உரிமை செயற்பாடுகள் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் சாட்டையடியாகவும், அராஜக காட்டுச் சட்டங்களைக்கொண்டு நிர்வகிக்கி ன்றமாதிரியான கட்டமைப்பை இந்த புதிய அரசாங்கம் முன்னெடுக்கின்றது,
இது எந்த வகையிலு்ம, நாட்டு மக்களின் நலனுக்கோ, உரிமைசார்ந்த விடயங்களிற்கோ இந்த சட்டம் செல்வாக்கு செலுத்த முடியாது. மாறாக இது மதம், காலாச்சாரம் சார்ந்த வன்முறைகளை தூண்டிவிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது,
பொருளாதார ரீதியாக குற்றமிளைத்தவர்களிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. எதுவாக இருப்பினும் பயங்கரவாதம் என்ற ஓர் சொற் தொடரை உட்படுத்தி நவீன உலக அரசியலிலே சட்டத்தை கொண்டுவருவதென்பது மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கை.
இந்த சட்டத்தில் உள்ள கட்டற்ற அதிகாரங்கள் என்பது ஆபத்தானது. ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிசாருக்கு கட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. எதேர்ச்சியாக எங்கும் கைது செய்யும் வகையிலும், கைதானவரை ஒருவருட காலத்திற்கு தடுத்து வைக்கவும், இரகசியமான முறையில் நீதிமன்றத்தில் கட்டளையை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலுமான சரத்துக்கள் உள்ளது.
, அதே போன்று ஏரிஏ எனும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்திலும்கூட இராணுவத்தினர், முப்படையினர், கடலோர காவல் படையினருக்கும் கைது செய்யவும், 24 மணிநேரத்துக்கு அதிகப்படாது தடுத்து வைக்கவும் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றது,
எனவே இந்த சட்டம் ஒட்டுமொத்த அரசாங்கத்தினுடைய மாற்றுக்கருத்துக்களை எதிர்க்கி ன்றவர்களிற்கும் அதைவிட மேலாக தற்போதைய வாழ்க்கை செலவீனங்களிற்கு எதிராக தொழிற்சங்கவாதிகள் தொழிற்சங்க போராட்டங்களை ஏற்படுத்தும் நிலையில் அதனை கட்டுப்படுத்தவும் அரசு முயல்கின்றது. அதற்கு இந்த சட்டம் அபாயகரமானதாக அமைகின்றது.
இந்த சட்டத்தை பாராளுமன்றம் இயற்றி நாட்டு மக்களிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தால், எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைகளையும் ஜனநாயக வழியிலே முன்னெடுக்க முடியாது. கருத்து சுதந்திரம், கூட்டம் கூடுவதற்கான சுதந்திரத்தையும் முன்னெடுக்க முடியாது.
ஆகவே அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை அதிலும் மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளைத்தான் அரசியலமைப்பு கொண்டிருக்கின்றது அந்த மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் உரிமைகளைக்கூட ஏரிஏ சட்டம் பறித்தெடுப்பதற்கான உள்நோக்கங் களைக் கொண்டிருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக அரசாங்கமானது அடக்குமுறைச்சட்டமாக இந்த சட்டத்தை பயன்படுத்துவதற்கு முயல்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் சமூகம் சார்ந்த சமவாயத்தை இதற்கு நியாயப்படுத்த பார்க்கின்றார்கள்.
அந்த சமவாயத்தில் 1980ம் ஆண்டு இலங்கை கைச்சார்த்திட்டது. அன்றிலிருந்து இன்றுவரை எவ்வளவோ கால மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அரசியல், சமூக, அறிவியல் மாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்று.
80ம் ஆண்டு கைச்சார்த்திட்ட சட்டத்தை இப்போது அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறோம் என்ற தேவைப் பாடு இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை தமக்கு சாதகமான முறையில் முகவுரையில் குறிப்பிடுகிறார்கள்.
எனவே இது ஒட்டுமொத்த நாட்டினுடைய ஜனநாயகத்தையும், மனித உரிமைக் குரலையும், ஊடக குரலினையும் முடக்கும் சட்டமாகவே நாங்கள் இதை பார்க்கின்றோம் என அவர் தெரிவித்தார்.