வெடுக்கனாறு ஆதி சிவன் கோவிலில் சிலை மீண்டும் நிறுவப்படும் யாருடைய அனுமதியும் தேவை இல்லை!! அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா!!

வெடுக்கனாறு ஆதி சிவன் கோவில் பிரச்சனையில் நடந்திருப்பது தவறு அது சிங்கள அறக்கலயே தமிழ் அறக்கலையே யார்  செய்திருந்தாலும் தவறு மீண்டும் வெடுக்கனாறு ஆதி சிவன் கோவிலில் சிலை நிறுவப்படும் அதற்கு ஆளுநருடையதே பிரதமருடைய அனுமதியே பெறவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்திய வீதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற கட்சி காரியாலய திநப்பு விழாவில்  கட்சி தலைவரும் அமைச்சருமான டக்கிளஸ் தேவானந்தா  சம்பிராய பூர்வமாக காரியாலயத்தை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

இன்றைய நிலையில் நாடாளமன்றத்தில் உள்ள கட்சிகளை  தனிப்பட்ட முறையில் அழைத்த போது ஒரு கட்சியை தவிர ஏனைய எதிர்கட்சிகள் தேர்தல் வேண்டாமது தேர்தல் வேண்டாம் என முன்வைத்துள்ளனர். தேர்தலுக்கு எதிராக யாரும் செயற்படமாட்டர்கள்.

1990 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை புலிகள் எதிர்த்தனர் ஆனால் நாங்கள் இதன் ஊடாக பிரச்சனையை தீர்க்க முடியும் என தெரிவித்தோம் அதனை மறுத்து துரோகத்தனம் என்றனர் இன்று என்ன நடந்தது தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும் என்ற மாதிரி நடந்திருக்கின்றது

நானும் 30 வருடமாக நாடாளுமன்றத்தில் இருந்துவருவதால் எனக்கும் அங்கிருக்க கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளும் புறமும் தெரியும் எனவே பொருத்தமான நிலையில் தேர்தல் வரும உரிய நேரத்தில் தேர்தல் நடாத்தப்படும்.

அதேவேளை பயங்கரவாத தடைச்சட்டம் உலகத்திலே எல்லா நாடுகளும் தங்களுடைய நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்டங்கள் இருக்கின்றது ஆனால் பெயர்கள் வித்தியாசப்படலாம் இலங்கையில் தமிழ் பேசும் மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது இன்று அந்த நிலமை இல்லை ஆனால் நாட்டை நிர்வகிப்பதற்கு சட்டம் தேவை

எனவே இது புதிதானதல்ல ஆளும் கட்சிகள் எதாவது ஒன்றை செய்யும் போது எதிர்க்கட்சிகள் எதிர்பதுதான் இங்குள்ள யதார்த்தம் அந்தவகையில் எதிர்கட்சிகள் அவிப்பிராயம் தெரிவிக்கின்றனரே தவிர இந்த சட்டத்தில் பிழை இருப்பதாக நான் கருதவில்லை ஆனால் இந்த பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் தொடர்பாக  நாங்கள் கட்சி என்ற வகையில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் நாடாளுமன்றம் வரும்போது எங்கள் கருத்துக்களை தெரிவிப்போம். நாட்டிற்கு சட்டங்கள் தேவை.

அதேவேளை நீண்டகாலமாக தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட 13 வது திருத்தச்சட்டமூலமான மாகாணசபை முறைமை ஊடாகத்தான் பிரச்சனைகளுக்ககு தீர்வு காணலாம் என நீண்டகாலமாக நான் சொல்லி வருகின்றேன். அப்போது தமிழ்கட்சிகள் இயக்கங்கள் அதனை எதிர்த்தது ஆனால் இன்று அவர்களும் அதற்கு ஆதரவாக இருக்கின்றனர். அந்தவகையில் ஜனாதிபதி ஏற்கனவே அதனை விளங்கியிருப்பதால் அதனை முன்வைத்துள்ளார் அது வரவேற்க கூடியது.

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் றோலர் படகுகளில் அத்துமீறி புகுந்து மீன்படிக்க அனுமதி வழங்கவில்லை இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெளிவாக ங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்கு புறம்பாக செயற்படாது என தெரிவித்துள்ளார்.

ஆகவே வீதிசட்டம் இருக்கின்றது அதனை மீறி நடக்கின்ற விடையங்களை கட்டுப்படுத்தப்படும் போது அது நெறிப்படுத்தப்படுகின்றது அது மாதிரி கடற் தொழிலுக்கும் ஒரு சட்டம் இருக்கின்றது அந்த சட்டங்களை மீறி நடக்கும் போது நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

சட்டவிரேத மீன்பிடியை கட்டுப்படுத்தவில்லை என கேட்டால் களவு எடுத்தால் பிழை என சட்டம் இருக்கின்றது கொலைகள் செய்யக் கூடாது என சட்டம் இருக்கின்றது ஆனால் அவைகள் நடந்து கொண்டுதானே இருக்கின்றது வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இலங்கை பூராகவும் சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர் எனவே சட்டத்தை மீறி செயற்படுவது தெரியவரும் போது நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம்.

அதேவேளை மட்டக்களப்பு வாவியில் சுற்றுலாதுறையை ஊக்கிவிப்பது மற்றும் கல்லடி பளைய பாலத்தை எவ்வாறு மக்களின் நலனுக்கு உபயோகிக்க முடியம் என நேரில் சென்று ஆராயவுள்ளேன் அதேவேளை வாழைச்சேனை மற்றும் ஒலுவில் மீன்பிடி துறை முகங்களை மேலும் அபிவிருத்தி செய்து மீன்பிடியை மேலும் வலுவாக்குவதற்கான திட்டங்கள் செயற்படுத்தபடவுள்ளது

காக்க்கை;கும் கனவில் பீய் தின்னுகின்ற எண்ணம் போல பினாமி அரசியல் மண்வியாபாரம் இரும்பு வியாபாரம் நடாத்துகின்றவர்கள் இன்று அரசியலுக்காக பினாமி வர்த்தகத்திற்காக அப்ப அப்போ எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews