பொலிசார் தாக்கியதாக குற்றச்சாட்டு குற்றச்சாட்டை மறுக்கிறார் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி  பகுதியில் பொலீசார் வீடு ஒஉகுந்து தாக்கியதாகவும் இதனால் பெண்மணி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது  தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.
நேற்று இரவு ஏழு முப்பது மணியளவில் மருதங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றிற்க்கு திடீரன உட்புகுந்த பொலீசார் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஆண் ஒருவர் மீது தாக்கியதாகவும்,
ஏன் தாக்குகின்றீர்கள் என கேட்டதற்க்கு பதில் எதுவும் சொல்லாம் பொலீசார் தொடர்ச்சியாக தாக்கியுள்ளதாகவும், இதனால் ஆத்திரமுற்ற பாதிக்கப்பட்டவர்கள் பதிலுக்கு பொலீசார் மீது கல்லெறி தாக்குதல் நடாத்தியதாகவும், அவ்வேளை பொலீசார் துப்பாக்கு சூடு நடாத்தியதாகவும் தெரிவிக்கும் பாதிக்கப்பட்டோர் துப்பாக்கு சூடுனடாத்திய வேளை காயமடைந்த பெண் பிள்ளையை. மருத்துவ மனைக்கு கொண்டு சென்றவேளை வழிமறித்த பொலீசார் நீண்ட நேரத்திற்க்கு பின்னர் குறித்து காயமடைந்த பெண் பிள்ளையை பருத்தித்துறை அாதார வைத்திய சாலைக்கு கொண்டுசெல்ல அனுமதித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் மருதங்கேணி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது துப்பாக்கி சூடு ஏதும் தம்மால் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்ததுடன் குறித்த வீட்டில் கசிப்பு விற்பனை  இடம் பெறுவதாக தமக்கு கிடைத்த தகவலின்  அடிப்படையில்  மரத்திற்கு கீழ் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது தாக்கியதாகவும் அதனை தொடர்ந்து போலீசாருக்கும் குறித்த வீட்டுக் காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடுகளில் போலீஸ் சார் அந்த வீட்டுக்காரரை கடுமையாக தாக்கியதாகவும் 19 வயது பெண் படுகாயம் அடைந்துள்ளதாகவும் படுகாயம் அடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக கொண்டு சென்றவளே மருதங்கேணி காவலரனில் தடுத்து நிறுத்தப்பட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மருதங்கனி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரையை தொலைபேசியில்  தொடர்பு கொண்டு கேட்ட போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒரு பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி சூடு ஏதும் நடாத்தவில்லை என்றுக்  தெரிவித்ததுடன் குறித்த நபரை கிளிநொச்சி நீதிமன்றில் இன்று குற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபரிற்க்கு ஏற்கனவே கசிப்பு விற்பனை தொடர்பான வழக்கு ஒன்று இடம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews