தலைமன்னார் கடலில் இந்திய படகுகளை பரிசோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் ஒருவரின் ரி-56 ரக துப்பாக்கி கடலில் விழுந்து காணாமல் போயுள்ள சம்பவம் சனிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் கடற்படைத் தளத்தைச் சேர்ந்த கடற்படை குழுவொன்று சம்பவதினமான சனிக்கிழமை தலைமன்னார் 4ஆம் வெலிப்பாறை கடலில் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் இதன்போது கடற்படை சிப்பாய் ஒருவரின் 30 ரவைகளுடன் ரி-56 ரக துப்பாகி ஒன்றும் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.