அச்சுவேலியில் போராட்டத்தில ஈடுபட்டு வருபவர்கள் வீதியோரத்தில் பந்தல் அமைத்து தொடர்ந்து போராட தயாரான போது அதற்கு அச்சுவேலிப் பொலிஸார் அனுமதி மறுத்தமையால் அங்கு குழப்ப நிலை தோன்றியது.
இந்நிலையில் தனியார் காணிக்குள் பந்தலை அமைத்து போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று இடம்பெற்றுவருகிறது.
அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் இன்று(11) செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் ஆரம்பித்து இடம்பெற்று வருகிறது.
இதன்போது போராட்டகாரர்கள் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட முற்பட்டபோது அங்கு வருகைதந்த அச்சுவேலி பொலிஸார் அவ்வாறு செய்ய முடியாதென தெரிவித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் விபரங்களை சேகரித்தனர்.
இந்நிலையில் தனியார் காணிக்குள் பந்தலை அமைத்து போராட்டத்தை தொடர்ந்து போராட்டகாரர்கள் மேள்கொண்டு வருகின்றனர்.