
தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் இன்று(11) அதிகாலை பௌசரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து காலி நோக்கி சீமெந்து தூள் ஏற்றிச்சென்ற பௌசரொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த சாரதி மற்றும் சாரதியின் உதவியாளரும் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுஇ மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.