
இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 25ஆம் நாள் நினைவேந்தல் இன்று (12.04.2023) புதன்கிழமை, பல்கலை மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.








யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நினைவேந்தலில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சி.ஜெல்சின், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத் தலைவர் அபிரக்சன், மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத் தலைவர் த.சிவரூபன் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோரால் நினைவேந்தப்பட்டது.
உலகம் பெண்ணியம் பேசிக் கொண்டிருந்த காலத்தில் பெண்ணியத்தை விஞ்சிய சக்தியைக் காட்டிய அன்னை பூபதியின் நினைவேந்தல் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகம் எங்கும் இவ்வருடம் நினைவேந்தப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.