
வடமராட்சி வடக்கு பருத்தித் துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அல்வாய் வடக்கு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் பொதி இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.




தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் அனுசரணையிலேயே குறித்த பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அல்வாய் வடக்கு மகாத்மா முன்பள்ளி மாணவர்களுக்கே குறித்த பொங்கல் பொதிகள் ஊடகவியலாளர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதில் அல்வாய் வடக்கு கிராம சேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் முன்பள்ளி ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதிகளை வீடு வீடாக கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது