பொம்மை ஊடக கலாசாரத்தை உருவாக்க அரசு முயற்சி – சஜித் ஆவேசம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஊடக அடக்குமுறைக்காக ஒலிபரப்பு அதிகார சட்டமொன்றையும் கொண்டுவர அரசு முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் மூலம் சுதந்திர ஊடகங்களை ஒடுக்குவதற்கு அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தகவல் அறியும் உரிமை மற்றும் ஊடக சுதந்திரத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதன் ஊடாக அரசுக்குக் கீழ்ப்படிந்து இணங்கும் பொம்மை ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளார்.

எதேச்சதிகார சர்வாதிகார ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் மூலம் நாட்டின் ஊடகங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை உடனடியாக நிறுத்துவதற்கு முன்னின்று செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews