யாழ்.மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை நல்லூர் மற்றும் மிருசுவில் பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் யாழ்.பிராந்திய வானிலை அதிகாரி தர்மலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சூரியனின் நீள் வட்டப்பாதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இலங்கையின் தென் துருவத்தில் இருந்து வட துருவம் நோக்கி சூரியன் உச்சம் கொடுக்க ஆரம்பித்துள்ளது.
அம்பாந்தோட்டையில் ஆரம்பித்து நேற்று முன்தினம் புதன்கிழமை அனுராதபுரம் மன்னார் பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுத்த நிலையில் தொடர்ச்சியாக நகர்வடைந்து முல்லைத்தீவு கிளிநொச்சியில் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக நாளை சனிக்கிழமை யாழ்.மாவட்டத்தில் நல்லூர் மற்றும் மிருசுவில் பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுத்து இலங்கையை விட்டு வெளியேறும்.
அக்காலப் பகுதியில் யாழ்.மாவட்டத்தின் வெப்பநிலை 37 பாகையை தாண்டக்கூடிய சாத்திய கூறுகள் தென்படுகிற நிலையில் அக் காலப் பகுதியில் இடியுடன் கூடிய மழையோ அல்லது மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்குரிய
வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.