அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழகம் புது வருடத்தினை முன்னிட்டி நடாத்திய மென்பந்தாட்ட துடுப்பாட்ட போட்டிகளில் 21 வயதிற்க்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழக முதலாம் இடத்தினையும், அம்பன் சிவனொளி விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தினையும் பெற்றிருந்தது.
இதே வேளை 21 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டுக் கழகமும், குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டுக் கழகமும் தெரிவாகியிருந்தது.
கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் சமூகமளிக்காமையால் குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டுக் கழகமும் அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழகமும் சவால் கிண்ணத்திற்க்கான போட்டியில் ஈடுபட்டன. இதில் அம்பன் பிங் பொங் விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது.
இதனால் அம்பன் பிங் பொங் விளையாட்டுக்கழகம் இதுவரை போட்டிகளில் 200வது வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.
கயிறிழுத்தல் போட்டியில் அரை இறிதியில் அம்பன் பிங் பொங் ஏ அணியினரும், உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகமும் மோதியது.
இதில் பாரதி விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது.
இதேவேளை அம்பன் பிங் பொங் விளையாட்டு கழக B அணிக்கும் குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டுக் கழகத்திற்க்கும் இடையில் இடம் பெற்ற கயிறுழுத்தல் போட்டியில் குடத்தனை செல்வா விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
இந்நிலையில் குடத்தனை செல்வா விளையாட்டுக் கழகமும், உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகமும் இறுதிப் போட்டியில் மோதியது. இதில் பாராதி விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
கயிறுழுத்தல் போட்டியில் வெற்றியீட்டிய உடுத்துறை பாரதி விளையாட்டு கழகத்திற்க்கு ஆட்டுக் கடா ஒன்று பரிசளிக்கப்பட்டது.
இரண்டாமிடம் பெற்ற குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டு கழகத்திற்க்கு அறுவருக்கும் ஆறு சேவல் கோழிகள் பரிசளிக்கப்பட்டன.
அம்பன் பிங் பொங் விளையாட்டுக் கழக தலைவர் க.கருணாகரன் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து வரவேற்புரை தலமை உரை, ஆசி உரை என்பன இடம் பெற்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதனய இராணுவ மேஜர் KHM சமன் பரிய ஏற்றியதை தொடர்ந்து கழக கொடியினை கழக தலைவர் க.கருணாகரன் ஏற்றினார்.
தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின.
மங்கல விளக்கினையும், கருத்துரைகளையும் கேடயம் மற்றும் பரிசில்களையும் நிகழ்வின் பிரதம விருந்தினரான பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் அருணகிரி வினோராஜ், சிறப்பு விருந்தினரான அம்பன் பெரியதம்பிரான் பிள்ளையார் ஆலயம் மற்றும் அம்பன் முருகன் ஆலயங்களின் பிரதம குரு வணக்கத்திற்க்குரிய சரவணபவ சர்மா, கௌரவ விருந்தினர்களான அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் சோ.வாகீசன், அம்ஒன் கிராம சேவகர் திருமதி பி.துவாரகா, பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பரியந்த அமரசிங்க, அம்பன் அபிவிருத்தி உத்தியோகத்தர் அகிலேந்திரன், மருதங்கேணி இளைஞர் சேவை உத்தியோகத்தர் வ.மனோகரன், கோப்பாய் விளையாட்டு உத்தியோகத்தர் சி.ஜிவிந்தன், இராணுவ மேஜர் KHM சமன் பிரிய அம்பன் கமநல சேவை நிலைய பொறுப்பதிகாரி திருமதி கௌரி திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டனர். நடுவர்களாக தங்களராசா பார்த்தீபன், உதயகுமார் நிசாந்தன் ஆகியோர் பணியாற்றியிருந்தனர்.
குறித்த மென்பந்தாட்ட துடுப்பாட்ட போட்டியில் 21 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 கழகங்களும், 21 வயதிற்க்கு மேற்பட்ட பிரிவில் 18 அணிகளும் கலந்து கொண்டிருந்தன. போட்டிகள் கடந்த 26/03/2023 அன்று ஆரம்பமாகி நேற்றைய தினம் இறுதி போட்டியாக இடம் பெற்றது.
இதில் கிராம மக்கள், பார்வையாளர்கள், விளையாட்டுகழகங்களின் வீரர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.