செம்பியன் பற்றில் சிறப்பாக இடம் பெற்ற புதுவருட விளையாட்டு போட்டி….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று  அண்ணமார் அறநெறி பள்ளியினரால்  புதுவருட பிறப்பை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டுள்ளன.

அறநெறி பாடசாலை ஆசிரியை திருமதி பர்மிகா சுகந்தன் தமலையில் நேற்று பிற்பகள் 2:30. மணொயளவில் செம்பியன் பற்று அண்ணமார் சிவகாமி அம்பாள் ஆலய முன்றலில் இடம் பெற்ற இந் நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பப்டனர்.
    
அதனை தொடர்ந்து மங்ல விளக்கு  ஏற்றப்பட்டது. மங்கல விளக்கை  நிகழ்வின் பிரதம விருந்தினரான ஆலய பிரதம குரு சிவசிறி அமிர்த சிறிஸ்கந்தராஜ குருக்கள், சிறப்பு விருந்தினர்களான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அமைப்பாளரும் முன்னாள் பருத்தித்துறை  பரிதேச சபை தவிசாளருமான,  உத்தியோகத்தர்  ஐ.சிறிரங்கேசுவரன், பருத்தித்துறை நகரசபை அபிவிருத்தி உத்தியோகத்தர் செபஸ்ரியாம்பிள்ளை ராஜ்குமார், கௌரவ விருந்தினர்களான செம்பியன் பற்று விளையாட்டுக் கழக தலைவர் கி.புஸ்பராசா, ஆலய நித்திய குரு தனேஸ்வர சர்மா, ஆலய தலைவர் த.புஸ்பராசா, உட்பட பலரும் ஏற்றி வைத்தனர், தொடர்ந்து வரவேற்புரை, தலமை உரைகள் இடம் பெற்றன.
அதனை தொடர்ந்து விளையாட்டுக்கள் ஆரம்பமாகின். இதில் சிறுவர்களுக்கான பந்து எறிதல், நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல்,  பணிஸ்  சாப்பிடுதல், தடை தாண்டல், கரண்டியில் தேசிக்காய் வைத்து ஓடுதல், வளையம் போடுதல், இருவத்தொற்க்கு கண் வைத்தல், ஊசிக்கு நூல் கோர்த்தல், தடை தாண்டல், முட்டி உடைத்தல், சாக்கோட்டம் என்பனவும் இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து பெண்களுக்கான கிடுகு இளைதல், பந்து பரிமாற்றமும், ஆண்களுக்கான தலையணை சண்டை, முட்டி உடைத்தல் போன்ற விளையாட்டுக்கள் இடம் பெற்றன.
இந்நகழ்வில் கருத்துரைகளையும், பரிசில்களையும் நிகழ்வின் பரிதம விருந்தினர், சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் வழங்கினர்.
இதில் அறநெறி மாணவர்கள், கிராம சிறுவர்கள், பெற்றோர்கள்,  நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews