புத்தாண்டை முன்னிட்டு, தமது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக, இன்று முதல் சில விசேட தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை குறித்த விசேட தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக, இன்று முதல் விசேட பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளி பிரதேசங்களுக்கு செல்வதற்காகவும், பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம், 10 முதல் 15 சதவீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் முதல், 25 முதல் 50 சதவீதமான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.