
இன்றையதினம் இணுவில் கந்தன் அறக்கட்டளையும், நந்தாவில் நீங்காமூலை காளியாச்சி அறக்கட்டளையும், ஒருங்கிணைந்து, இணுவில் கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் மனிதநேயப் பணிகளை மேற்கொண்டன.
இதன்போது வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், கோண்டாவில் ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய, தந்தையை இழந்த பல்கலைக்கழக மாணவிகளுக்கு மடிக்கணினிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.






