
இனங்களுக்கு இடையில் நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் முகமாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் சித்திரை புத்தாண்டு விழா இன்றைய தினம் சனிக்கிழமை யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம் பெற்றது.
வடமாகாண ஆளுநர் செயலகம் 51ஆவது காலால் படைப்பிரிவு , மாவட்ட செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் சைக்கிள் ஓட்டம் மரதன் ஓட்டம், கயிறு இழுத்தல் , கோலம் போடுதல் தயிர் முட்டி அடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன், யாழ். மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன், யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மற்றும் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானி பொலிஸ் உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.










